அவசரகால நிலை நீடிக்கும் வரை சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீடிக்கும் என உத்தியோகபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்­டியில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வங்­க­ளை­ய­டுத்தே பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலை­த­ளங்களை இலங்கை தொலை­தொ­டர்­புகள் மற்றும் ஒழுக்­காற்று ஆணைக்­குழு தற்­கா­லி­க­மாக முடக்­கி­யி­ருந்­தது. 72 மணித்­தி­யா­ல­யங்­க­ளுக்கு மட்­டுமே இக்­கட்­டுப்­பாடு என அறி­விக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் தொடர்ச்­சி­யாக இவை முடக்­கப்­பட்ட நிலை­யி­லேயே இருக்­கின்­றன. 

சமூக வலைத்தளங்கள் நேற்று (சனிக்கிழமை) முதல் வழமையாக இயங்கும் என ராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, அவசர காலச்சட்டத்தின் கீழ், சமூக வலைத்தளங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் வரையில் சமூகவலைத்தளங்களின் மூடக்கம் தொடர வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

ஜனாதிபதியால் பிரகனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை நாளைமறுதினம் செவ்வாய்கிழமையுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமூகவலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள் குறித்த தடை நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலை அடுத்து நீக்கம் செய்யப்படலாம் என தொலை­தொ­டர்­புகள் மற்றும் ஒழுக்­காற்று ஆணைக்­குழு தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.