கண்டி மாவட்டத்திலுள்ள அரசாங்க பாடசாலைகள் அனைத்தும்  நாளை 12 ஆம் திகதி திங்கட் கிழமை திறப்படவுள்ளதாக மத்திய மகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் கடந்த திங்கட் கிழமை முதல் அசாதாரண சூழ்நிலை நிலவியதனால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பாடசாலைகள் மூப்பட்டிருந்தன. அத்துடன் பிரதான பாடசாலைகளுக்கு மத்தியில் நடத்துவதற்கு தீர்மானிக்கபட்டிருந்த வருடாந்த கிரிக்கெற் சமர்  உட்பட இன்னும் சில வைபவங்களும் கால வரையறையின்றி பிற்போடப்பட்டிருந்து.

இவ்வாறான நிலையில் தற்போது கண்டி மாவட்டத்தில் அமைதி நிலை நாட்டப்பட்டு, சுமுகநிலை ஏற்பட்டு வருவதனால் நாளை மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.