சிரி­யாவில் ஒரு வாரத்­துக்குள் யுத்த நிறுத்­த­த்தை நடை­மு­றைப்­ப­டுத்த உலக அதி­கார சக்­திகள் இணக்கம்

Published By: Raam

13 Feb, 2016 | 06:17 PM
image

உள்­நாட்டுப் போரால் பாதிக்­கப்­பட்­டுள்ள சிரி­யாவில் ஒரு வார காலத்­துக்குள் நாட­ளா­விய யுத்த நிறுத்­த­மொன்றை நடை­மு­றைப்­ப­டுத்த உலக அதி­கார சக்­திகள் வெள்­ளிக்­கி­ழமை இணக்கம் கண்­டுள்­ளன.

ஜேர்­ம­னிய முனிச் நகரில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­க­ளை­ய­டுத்தே இந்த இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

என்னும் இந்த யுத்த நிறுத்­த­மா­னது சிரி­யா­வி­லுள்ள ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் மற்றும் அல் – நுஸ்ரா குழு­வினர் ஆகி­யோ­ருக்கு எதி­ரான போருக்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

போரால் பாதிக்­கப்­பட்ட பிராந்­தி­யங்­களில் சிக்­கி­யுள்ள மக்­க­ளுக்­கான விநி­யோ­கங்­களை மேற்­கொள்­­வ­தற்­காக முன் னெடுக்கப்பட்ட மேற்­படி யுத்த நிறுத்தம் குறித்து சர்­வ­தேச ரீதியில் ஆத­ரவைப் பெற்ற சிரிய குழு­வி­லுள்ள அமைச்­சர்­களும் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர்.

அலெப்போ மாகா­ணத்தில் ரஷ்ய படை­யி­னரின் ஆத­ர­வுடன் சிரிய இரா­ணுவம் தாக்­கு­தல்­களை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலை­யி­லேயே இந்த இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

இந்தத் தாக்­கு­தல்­க­ளா­னது அலெப்போ பிராந்­தி­யத்தில் கிளர்ச்­சி­யா­ளர்­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள பிர­தே­சங்­களில் சிக்­கி­யுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லா­க­வுள்­ளன.

இந்­நி­லையில் தற்­போது எட்­டப்­பட்­டுள்ள யுத்த நிறுத்த இணக்­கப்­பாடு இலட்­சிய நோக்­காக உள்ள அதே­ச­மயம், அதன் வெற்றி அந்த இணக்­கப்­பாட்டை எட்­டிய தரப்­பினர் தமது வாக்­கு­று­தி­க­ளுக்கு கௌர­வ­ம­ளிக்­கி­றார்­களா என்­பதில் தங்­கி­யுள்­ள­தாக அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் ஜோன் கெரி தெரி­வித்தார்.

''தற்­போது வெறும் வார்த்­தை­களே உடன்­ப­டிக்­கையில் உள்­ளன. எதிர்­வரும் நாட்­களில் அதனை நட­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய தேவை­யுள்­ளது" என அவர் கூறி னார்.

அமெ­ரிக்கா மற்றும் ரஷ்யா தலை­மை­யி­லான செயற்­கு­ழு­வொன்று சிரி­யாவில் மோதல்­களில் ஈடு­பட்­டுள்ள பிரி­வி­ன­ரு­ட­னான கலந்­து­ரை­யாடல் மூலம் யுத்த நிறுத்த அமு­லாக்­கத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் செயற்­கி­ர­மத்தில் ஈடு­ப­ட­வுள்­ளது.

இந்­நி­லையில் மோதல்­கள் இடம்­பெறும் இடங்­களில் சிக்­கி­யுள்ள மக்­க­ளுக்கான நிவா­ரண உத­வி­களை விநி­யோ­கிக்கும் நட­வ­டிக்­கையை உட­ன­டி­யாக ஆரம்­பிக்க ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, இந்த உடன்படிக்கை குறித்து ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் செர்கேயி லாவ்ரோவ் மற்றும் சிரியாவுக்கான ஐக்கிய நாடுகள் விசேட தூதுவர் ஸ்ரப்பன் டி மிஸ்துரா ஆகியோருடன் இணைந்து அறி விப்புச் செய்தார். இந்த உடன்படிக்கைக்கு 17 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21
news-image

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190...

2025-03-17 10:27:51
news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13