கண்டி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிகழ்ந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.  

பிரதமர் இன்று திகன, கென்கல்ல, பள்ளேவெல, அகுரணை ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று நிலமையினை அவதானித்ததுடன் சேதமடைந்துள்ள பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்களையும் பார்வையிட்டதுடன் பிரதேசவாசிகளுடனும் கலந்துரையாடினார்.

மக்கள் சந்திப்பின் பின்னர்  கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட பாதுகாப்பு குழுக்கூட்டத்திலும் கலந்துகொண்ட போதே பிரதமர் குறித்த ஆலோசனையினை அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளார். 

மேலும் நஷ்டஈடு வழங்கும் வடவடிக்கையினை நாளையே  ஆரம்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.