வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு கிலோ 800 கிராம் கேரள கஞ்சாவுடன் இன்று அதிகாலை ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு கிலோ 800 கிராம் கேரள கஞ்சாவுடன் புல்மோட்டைப் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த நுவான் தர்சன என்ற 38 வயதுடைய நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் இன்று மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.