ஹொக்கி சம்­மே­ளனம் கலைக்­கப்­பட்­டுள்ள நிலையில் சட்டரீதி­யான தகு­தியை அது இழந்­து­விட்­டது. அதனால் எந்­த­வொரு பத­வி­யிலும், எந்த விதத்­திலும் விளை­யாட்­டுத்­து­றை­யுடன் ஹொக்கி சம்மேளனம் செயற்­ப­ட­மு­டி­யாது என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

அத்­தோடு தேசிய ஒலிம்பிக் சம்­மே­ள­னத்தில்  வகிக்கும் பத­வியும் செல்­லாது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

இலங்கை ஹொக்கி சம்­மே­ள­னத்தின் நிர்­வாக சபை கலைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் கடந்த மாதம் 23ஆம் திகதி நடை­பெற்ற தேசிய ஒலிம்பிக் சம்­மே­ளனத் தேர்­தலில் ஹொக்கி சம்­மே­ள­னத்தின் அதி­காரியொருவர் ஒலிம்பிக் சங்­கத்தின் உப தலை­வ­ராக போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்றார்.

இந்­நி­லையில் நேற்று ஹொக்கி சம்­மே­ள­னத்­திற்கு நீதிவான் நீதி­மன்­றம் தடை விதித்தது.

இது­கு­றித்து விளை­யாட்­டு­த்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ர­விடம் வினவிய­போது,

இலங்­கையின் விளை­யாட்­டுத்­துறை சட்­டத்­தின்­படி கலைக்­கப்­பட்­டுள்ள ஒரு சங்­கத்­திற்கு விளை­யாட்­டுத்­து­றையில் செயற்­பட எவ்­வித தகு­தியும் இல்லை.

அதையும் மீறி அவர்கள் செயற்பட்டுள்ளமை சட்டப்படி குற்றமாகும். அதற்கான சட்ட நடவடிக்கைகள் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும்.

அதேவேளை கொமன்வெல்த் போட்டிகளிலும் ஹொக்கி சங்கத்தின் அதிகாரிகள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.