முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களில் நேற்று ஜும்ஆத் தொழுகை இராணுவம் மற் றும் பொலிஸ் பாது­காப்­புக்கு மத்­தியில் நடத்­தப்­பட்­டது. அத்­துடன் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மூடப்­பட்­டி­ருந்­த­துடன் பாட­சா­லை­களில் மாண­வர்­களின் வரு­கையும் வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தது.

நாட்டில் கடந்த சில தினங்­க­ளாக அமை­தி­யின்மை நில­விய பின்னர் நேற்று வெள்ளிக்­கி­ழமை, ஜும்ஆத் தொழு­கைக்கு முஸ்­லிம்கள் கூடு­வ­தனால் அமை­தி­யின்மை ஏற்­ப­டலாம் என அச்சம் வெளி­யி­டப்­பட்­டி­ருந்தது.

அத்­துடன் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­ப­டலாம் எனவும் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

எனினும் நாட்டின் நிலை­மை­யினை கருத்­திற்­கொண்டு ஹர்­தாலில் ஈடு­பட வேண்டாம் என பல தரப்­பாலும் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. குறிப்­பாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை முஸ்­லிம்­க­ளிடம் அவ்­வேண்­டு­கேளை விடுத்­த­துடன் மக்­களை அமைதி காக்­கு­மாறும் வேண்­டிக்­கொண்­டி­ருந்­தது. 

மேலும் ஜும்ஆப் பிர­சங்­கங்­களை மன ஆறுதல் அளிக்கும் வகை­யிலும், அமை­தியைப் பேணும் வகை­யிலும் அமைத்­துக்­கொள்­ளு­மாறும் தொழுகை முடிந்த பின்னர் அமை­தி­யான முறையில் கலைந்து செல்­லு­மாறும் ஜம்­இய்­யதுல் உலமா சபை வேண்­டிக்­கொண்­டி­ருந்­தது.

ஆகவே ஹர்­தா­லுக்கு எந்­த­வொரு தரப்­பி­னரும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அழைப்பு விடுக்­க­வில்லை. எனினும் நாடு தழு­விய ரீதி­யி­லுள்ள முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களில் அனே­க­மா­னவை நேற்று மூடப்­பட்­டி­ருந்­தன. அத்­துடன் முஸ்லிம் பாட­சா­லை­களில் மாண­வர்­களின்  வரவும் வீழ்ச்சி கண்­டி­ருந்­தது.  கொழும்­பி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லை­களில் மாண­வர்­களின் வரவு வெகு­வாக வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்து. ஆகவே அப்­பா­ட­சா­லைகள் உரிய நேரத்­திற்கு முன்னர் மூடப்­பட்­டது. இதே­வேளை முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் வாகனப் போக்­கு­வ­ரத்தும் குறைந்­தி­ருந்­தது. 

எனவே அசம்­பா­விதம் இடம்­பெற்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள பள்­ளி­வா­சல்கள் உட்­பட ஏனைய மாவட்­டங்­க­ளிலும் நகர் பிர­தே­சங்­க­ளி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளிலும்  ஜும்ஆத் தொழுகை நேரத்­திலும்   பொலிஸ் மற்றும் இரா­ணு­வத்­தினர் விசேட பாது­காப்பு கடை­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். அது தவிர அந்­தந்த பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­க­ளி­னாலும் அசம்­பா­வி­தங்கள் ஏதும் இடம்­பெ­றாத வகையில் விசேட ஒழுங்­குகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.  

குறிப்­பாக பள்­ளி­வா­ச­லுக்கு வரு­ப­வர்கள் பள்­ளி­வா­சலை அண்­மித்த பிர­தே­சத்தில் கூடி நிற்­பற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் ஜும்ஆப் பிர­சங்­கங்கள் சகிப்புத் தன்­மை­யையும் அமை­தி­யையும் பேணு­வது தொடர்பில் அமைந்­தி­ருந்­தன.

இதே­வேளை அவி­சா­வளை  பிர­தே­சத்­தி­லுள்ள பள்­ளி­வாசல் ஒன்றில் ஜும்ஆத் தொழுகை நடை­பெற்­ற­போது தேரர் ஒரு­வரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் தெஹிவளையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஜும்ஆத் தொழுகையின் போது, ரத்மலான மற்றும் கல்கிஸ்ஸை விகாரைகளின் பிக்குமார்கள் அங்கு பிரசன்னமாகியிருந்ததுடன் தொழுகை முடிந்த பின்னர் மக்களை சந்தித்து அனுதாபங்களை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.