சென்னையில் கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரியில் உயர் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இன்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாணவியான அஸ்வினியிடம் இளைஞரொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, திடீரென அவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.

இந்நிலையில் படுகாயங்களுக்குள்ளான மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கத்தியால் குத்திய இளைஞனை துரத்திப் பிடித்த அங்கிருந்த மக்கள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒரு மாதத்திற்கு முன்னர் குறித்த மாணவியை வீடு புகுந்து கட்டாய திருமணம் செய்ததாகவும். இது தொடர்பில் மாணவியின் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை பொலிஸார் அழைத்து எச்சரித்துள்ளனர். இதனையடுத்து தன்னை பொலிஸாரிடம் காட்டிக்கொடுத்ததற்காக குறித்த மாணவியை கொலை செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.