பாலினச் சமத்துவத்தின் அடிப்படையில் அனைவரும் முன்மாதிரியாக இருக்க வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பரிஸிலுள்ள முதலீட்டு  நிறுவனத்துக்கு நேற்று  விஜயம் செய்தபோதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பெண்களின் உரிமைகளை வலியுறுத்துதல், வேலைத்தளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களுக்கான சமத்துவம், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பொலிஸ் ஆதரவளித்தல், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்தல் ஆகியவற்றுக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள மக்ரோன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.