கொழும்பு, வாழைத்தோட்டம் நீதிமன்ற வளாகத்தை அண்மித்த பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக விசேட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நகரை ஏற்றிவந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரே மிரிஹான பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் அங்கொடை, புத்கமுவ பகுதியை சேர்ந்த 22 வயதுடைய நபரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி குறித்த துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்ற நிலையில், சம்பவத்தில் 39 வயதான வாழைத்தோட்டத்தை சேர்ந்த நபரொருவர் உயிரிழந்த நிலையில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர், பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை புதுக்கடை நீதிவான் நீதிமன்றின் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.