கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் உடைப்பு : பொலிஸார் மீது வியாபாரிகள் அதிருப்தி

Published By: Priyatharshan

09 Mar, 2018 | 02:47 PM
image

கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் பணமும் திருடப்பட்டு வருகின்ற போதும் பொலிஸாரால் இது வரை எவ்வித முன்னேற்றகரமான நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிளிநொச்சி நகரின் ஏ-9 பிரதான வீதி மற்றும் கனகபுரம் டிப்போ வீதியில் அமைந்துள்ள இருபதுக்கு மேற்பட்ட வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டுள்ளன. 

இவற்றில் இருந்து பணமும் பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தொலைபேசி  விற்பனை நிலையங்கள் உடைக்கப்பட்டு கையடக்கத் தொலைபேசி, மீள் நிரப்பு அட்டைகள், உள்ளிட்ட பொருட்கள் திருப்பட்டுள்ள நிலையில்  அது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த போதும் பொலிஸாரினால் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.  

இந்த நிலையில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள வியாபார நிலையங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர் திருடர்கள் தங்களின் கைவரிசையை காட்டுகின்றனர். 

இதன் போது அருகில் உள்ள வியாபார நிலையங்களின் கண்காணிப்பு கமராக்களில் திருடர்களின் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ள போதும்  பொலிஸார் அதனைக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர் எனவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10