முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை மன்னாரிலுள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.

மன்னார் பஸார் பகுதி மற்றும் ஏனைய இடங்களில் உள்ள முஸ்லிம்களின்  வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, அப்பகுதியிலுள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் அதிக அளவில் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் மன்னாரில் உள்ள முஸ்லிம்களின் பள்ளி வாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமைபோல் இடம்பெற்று வருவதோடு, பாடசாலைகள் மற்றும் அரச தனியார் திணைக்களங்களின் செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.