ஒரு வருட காலமாக கடுமையான தலைவலி, வாந்தி மற்றும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு என்பவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவரின் மூளையில் 30 க்கு மேற்பட்ட நாடாப் புழு முட்டைகள் இருப்பதை கண்டறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
தென்மேற்கு சீனாவில் குயிஸொயு பிராந்தியத்தைச் சேர்ந்த வூ என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் 46 வயது நபரின் மூளையிலேயே இவ்வாறு அளவுக்கதிகமான நாடாப்புழு முட்டைகள் இருப்பது மருத்துவமனை ஊடுகாட்டும் கருவி பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த முட்டைகளில் சில ஒரு சென்ரிமீற்றர் அளவான விட்டத்தைக் கொண்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வூ சமைக்காத அல்லது சரியான முறையில் சமைக்கப்படாத பன்றி இறைச் சியை உண்டமை காரணமாகவே அவ ருக்கு மேற்படி நாடாப் புழு தொற்று ஏற்பட்டுள்ளதாக நம்புவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் புழு முட்டைகள் காரணமாக மூளையில் அளவுக்கதிகமாக நீர் சேர்ந்து வூ கடும் உடல்நலப் பாதிப்புக்குள்ளாக நேர்ந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் வூவிற்கு சிகிச்சையளித்த குயிஸொயு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படும் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரான யாங் மிங் கூறுகையில், நாடாப்புழு முட்டைகளை அகற்ற மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையையடுத்து வூ தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொடர்ந்து அவருக்கு உடலிலுள்ள நாடாப் புழுக்களை கொல்வதற்கு சிகிச்சையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வூவின் மூளையிலிருந்த முட்டைகள் பொரித்து புழுக்கள் வெளியேறும் பட்சத்தில் அவை மூளைக் கலங்களுக்கு பாரிய சேதத்தை விளைவித்து உயிராபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM