இந்­திய கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு சம்­பள உயர்வு வழங்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி அணித் தலைவர் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, தவான் உள்­ளிட்ட 5 பேருக்கு ஆண்­டுக்கு இந்­திய ரூபா மதிப்பில் 7 கோடி ரூபா வீதம் கிடைக்­க­வுள்­ளது. டோனி, அஷ்வின் ஆகியோர் இரண்­டா­வது பிரி­வுக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

இந்­திய கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு ஆண்­டு­தோறும் சம்­பள ஒப்­பந்­தப் ­பட்­டியல் வெளி­யி­டப்­படும். இதன்­படி ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று ‘பிரி­வு­களில்’ வீரர்கள் இடம் பிடிப்பர். இதில் ஏ ‘பிரிவு’ வீரர்­க­ளுக்கு இந்­திய ரூபா மதிப்பில் 2 கோடி ரூபா சம்­பளம் கொடுக்­கப்­பட்டு வந்­தது. 

இதை அதி­க­ரித்துத் தர வேண்டும் என வீரர்கள் இந்­திய கிரிக்கெட் சபை­யி­டம் பேச்­சு­வார்த்தை நடத்­தினர். 

தற்­போது 26 வீரர்கள் இடம்பெற்ற புதிய ஒப்­பந்தப் பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

‘ஏ+’ (ரூ.7 கோடி): கோஹ்லி, தவான், ரோஹித்,

 புவ­னேஷ்வர், பும்ரா.

‘ஏ’ (ரூ. 5 கோடி): டோனி, அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரஹானே, சஹா, முர­ளி­விஜய்.

‘பி’ (ரூ. 3 கோடி): லோகேஷ் ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சஹால், பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ஷர்மா.

‘சி’ (ரூ. 1 கோடி): கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, ரெய்னா, அக்சர் படேல், நாயர், பார்த்தீவ் படேல், யாதவ்.