கண்டி வன்முறை சம்பவத்தின் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தினார் பொலிஸ் பேச்­சாளர்

Published By: Robert

09 Mar, 2018 | 11:55 AM
image

கண்டி மாவட்டம் முழு­வதும் கடந்த மார்ச் 4 ஆம் திகதி இரவு முதல் பதி­வான  வன்­முறைகள் கர­ண­மாக இரு உயிர்கள் காவு­கொள்ளப்­பட்டு மேலும் 11 பேர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெறு­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். 

இத­னை­விட பொலி­ஸா­ருக்கு  நேற்று காலை 6 மணி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் கிடைக்கப் பெற்ற முறைப்­பா­டு­க­ளுக்கு அமைய 4 பள்­ளி­வா­சல்கள், 45 வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­களும், வாகன சேதங்கள் தொடர்­பி­லான 11 சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

உயிர்­ப­லி­களில் பள்ளே­கல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கெங்­கல்ல பகு­தியில் 26 வயது இளை­ஞனின் மரணம் தொடர்பில், பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்கு அமைய சந்­தேக நபர்­களைக் கைது செய்ய குற்றப் புல­னாய்வுப் பிரிவின்  உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் கீழான சிறப்புக் குழு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும்  அவர் மேலும் தெரி­வித்தார். 

எனினும் பூஜா­பிட்­டிய பகு­தியில் வன்­மு­றை­யா­ளர்­க­ளி­டையே இருந்த கைக்­குண்டு வெடித்­ததில்  28 வய­தான அம்­ப­தென்ன பகு­தியைச் சேர்ந்த இளஞர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் இந்த சம்­ப­வத்­தி­லேயே வன்­முறைக் கும்­பலில் இருந்த 11 பேர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இது தொடர்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்­த­தா­வது,

 கண்டி மாவட்­டத்தின் பல இடங்­க­ளிலும் மிகத் திட்­ட­மிட்டு இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் நேற்று காலை 6.00 மணி­வரை பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பா­டு­களின் பிர­காரம் 45 வீடுகள் மற்றும் கடைகள் சேத­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  ரங்­கல பொலிஸ் பிரிவில் வீடுகள், கடைகள் சேத­ப்ப­டுத்­தப்­பட்ட 2 சம்­ப­வங்­களும், கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸ் பிரிவில் 5 சம்­ப­வங்­களும் மெனிக்­ஹின்ன பொலிஸ் பிரிவில் ஒரு சம்­ப­வமும், பள்ளே­கல பொலிஸ் பிரிவில் 16 சம்­ப­வங்­களும் தெல்­தெ­னிய பொலிஸ் பிரிவில் 18 சம்­ப­வங்கள் தொடர்­பிலும் வத்­தே­கம பொலிஸ் பிரிவில் 2 சம்­ப­வங்­களும், கண்டி பொலிஸ் பிரிவில் ஒரு சம்­ப­வமும் இது தொடர்பில் பதி­வா­கி­யுள்­ளன. 

அத்­துடன் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­குதல் சம்­ப­வங்கள்  குறித்த 4 முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ளன.  கட்­டு­கஸ்­தோட்டை பொலி­ஸா­ருக்கு மூன்றும் பூஜா­பிட்­டிய பொலி­ஸா­ருக்கு ஒரு முறைப்­பாடும் இது தொடர்பில் கிடைத்­துள்­ளன.

வாகனங்­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டமை தொடர்பில் 11 முறைப்­பா­டுகள் உள்­ளன. ரங்­கல பொலி­ஸா­ருக்கு 3 முறைப்­பா­டு­களும், மெனிக்­ஹின்ன பொலி­ஸா­ருக்கு ஒரு முறைப்­பாடும் பள்ளே­கல பொலி­ஸா­ருக்கு 5 முறைப்­பா­டு­களும், தெல்­தெ­னிய பொலி­ஸா­ருக்கு இரு முறைப்­பா­டு­களும் இது தொடர்பில் கிடைக்கப் பெற்­றுள்­ளன. 

காய­ம­டைந்­த­வர்கள் 11 பேர் தொடர்ந்து வைத்­தி­ய­சா­லையில் உள்­ளனர். இந்த 11 பேரும் பூஜா­பிட்­டியில் கைக்குண்­டு­வெ­டிப்பில் காய­ம­டைந்­தவ்ர்­க­ளாவர். வன்­மு­றை­யா­ளர்­க­ளிடம் இருந்த கைக்­குண்டு வெடித்­ததில் இந்த அனர்த்தம் இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போது ஒருவர் உயி­ரி­ழந்­தி­ருந்த நிலையில், அவ­ரது சட­லத்­துக்கு அருகே,  கைக்­குண்டின் பாது­காப்பு கம்­பியை தட­ய­வியல் பொலிஸ் பிரி­வினர் மீட்­டுள்­ளனர்.

எனினும் கடந்த மார்ச் 5 ஆம் திகதி வன்­மு­றை­யா­ளர்­களால் கொளுத்­தப்­பட்ட கடை மற்றும் வீட்­டுடன் கூடிய கட்­ட­டத்­துக்குள் இருந்து 26 வய­தான இளைஞர்  ஒருவர் மீட்­கப்­பட்­டி­ருந்தார். புகை அவ­ரது சுவாசப் பைகளை நிரப்­பி­யதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளமை பிரேத பரிசோதனை ஊடாக  உறுதியாகியுள்ளது. எனினும் தீ வைப்பு ஒரு திட்டமிட்ட குற்றச் செயல் என்பதால்  அந்த மரணம் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியோரைக் கைது செய்ய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான குழுவொன்றினை விசாரணைக்கு அனுப்பியுள்ளார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் நாட்டில்...

2026-07-13 11:48:46
news-image

இலங்கை - உஸ்பெகிஸ்தான் இடையே புதிய...

2026-07-13 11:36:24
news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26
news-image

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ...

2026-07-13 09:56:19
news-image

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில்...

2026-07-13 09:25:14
news-image

பேராதனை, கொழும்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன்...

2026-07-13 09:18:27
news-image

டெங்கு அபாயத்தால் மூடப்பட்டிருந்த கட்புல, அரங்கேற்றக்...

2026-07-13 09:16:08
news-image

மஹரகமவில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!

2026-07-13 09:06:29