தமிழ் மக்­களின் உரி­மைக்­காக வழங்கும் அழுத்­தங்­களை போன்று   முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றை­க­ளையும் கவ­னத்தில் கொண்டு இம்­முறை ஜெனிவா தீர்­மானம் அமைய வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழர் என்ற  உணர்வில் எமது உரி­மைக்­காக இணைந்து போரா­ட­வேண்­டிய காலம் வந்­துள்­ளது என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். 

அடக்­கு­மு­றை­களின் கொடு­மை­யினை அனு­ப­வித்­த­வர்கள் என்ற ரீதியில் முஸ்லிம் மக்கள் மீதான அடக்­கு­மு­றையை எம்மால் உணர முடி­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

நேற்று வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் மது­வரி திருத்­தச்­சட்டம் மீதான விவா­தத்தின் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், கடந்த இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் கண்­டிய மற்றும் அம்­பா­றையில் இடம்­பெற்ற சம்­பவங்கள் எமது மனங்­களை உலுக்­கியவைகளாக மாறி­யுள்­ளன.  

கடந்த காலங்­களில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் பல இடம்­பெற்­றுள்­ளன. வர­லாற்றுக் காலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் மீதான அடக்­கு­முறை இடம்­பெற்­றமை பதி­வா­கி­யுள்­ளது. அப்­போது தமிழ்த் தலை­மைகள் முஸ்­லிம்கள் தொடர்பில் குரல் கொடுக்­க­வில்லை என்ற கருத்து நில­வி­யது. எனினும் தந்தை செல்வா முஸ்லிம் மக்கள் குறித்து தமிழ் மக்­களின் குரலாய் பாரா­ளு­மன்­றத்தில் குரல் கொடுத்தார். 

இன்று முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக நிகழும் அடக்­கு­முறை போன்றே தமிழ் மக்

­களும் அடக்­கு­மு­றைக்கு ஆளா­னார்கள். தமிழ் மக்கள் அடக்­கு­மு­றையின் போர்­வையில் படு­கொலை செய்­யப்­பட்­டனர். அன்று சிறு­பான்மை மக்­க­ளான எம்மை அடக்­கி­யதை போலவே இன்று முஸ்லிம் மக்கள் மீதும் அடக்­கு­முறை பிர­யோகிக்­கப்­பட்டு ஒடுக்­கப்­ப­டு­கின்­றனர். 

முஸ்லிம் மக்­களின் துன்பம், வலி என்­ன­வென்­பது குறித்து அடக்­கு­மு­றையை அனு­ப­வித்த ஒரு இன­மாக எம்மால் உணர முடி­கின்­றது. கண்­டியில் இடம்­பெற்ற சம்­பவம் யாரால் இடம்­பெற்­றது என்­பது குறித்தும் அது நடக்­க­வி­ருப்­பது என்­பது குறித்தும் பொலிஸ், புல­னாய்வு துறைக்கு தெரிந்­தி­ருக்க வேண்டும். பிரச்­சி­னை­களுக்கு தீர்வு காண இன, மத ரீதியில் அடக்­கு­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­விடக் கூடாது. ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் நிலை­மை­களை சரி­யாக இனங்­கண்டு பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்டும். அதேபோல் இன்று இலங்­கையின் கடந்த கால யுத்த குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள், தமிழ் மக்­களின் காணி விடு­விப்பு, மீள் குடி­யேற்றம், காணா­ம­லாக்­கப்­பட்டோர் விவ­காரம் குறித்து ஜெனி­வாவில் தற்­போது கூடி­யுள்ள மனித உரி­மைகள் பேர­வையில் ஆரா­யப்­ப­டு­கி­றது.  அதற்­கான தீர்வு ஒன்­றினை நாம் எதிர்­பார்த்து செயற்­பட்டு வரும் நிலையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள  முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­முறை சம்­ப­வங்­க­ளையும் பதிவு செய்து தமிழ் மக்கள் போல் முஸ்லிம் மக்­களின் உரி­மைக்கும் தீர்வு ஒன்­றினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். முஸ்லிம் மக்­களும் இந்த நாட்டில் சம உரி­மை­யுடன் வாழக்­கூ­டிய அங்­கீ­கா­ரத்தை பெற்­று­க்கொ­டுக்க வேண்டும். 

கடந்த காலத்தில் அடக்­கு­முறை இரா­ணுவ ஆட்சி ஒன்று இடம்­பெற்ற நிலையில் அதில் இருந்து விடு­பட வேண்டும் என்­ப­தற்­கா­கவே மக்கள் நல்­லாட்சி அர­சாங்கம் ஒன்றை உரு­வாக்­கினர். இந்த ஆட்சியிலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அடக்குமுறை கையாளப்படுகின்ற நிலையில் நல்லாட்சி மீது நம்பிக்கை இழக்கப்பட்டு வருகின்றது. எனவே, அரசாங்கம் உடனடியாக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும்  நடவடிக்கை களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.