(க.கிஷாந்தன்)

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை கடவளை பகுதியில் கனரக வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போது வாகனத்தின் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகனத்தின் சாரதியும் உதவியாளருமே பயணித்துள்ளதாகவும் இதில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.