கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் காயமடைந்த 29 வயதுடைய இளைஞரே உயிரிழந்தவராவார்.

கொட்டாஞ்சேனை, ஹெட்டியாவத்தை, சுமித்ராராம வீதியில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கப்பப் பணம் வழங்காமை காரணமாகவே குறித்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத ஆயுததாரிகளே துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் இருவரும் 34 மற்றும் 61 வயதுடையவர்களாவர்.