சுதந்திரக் கிண்ண முத்தரப்பு இருபதுக்கு 20 கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நடத்துகிறது.
இதில் இன்றைய 2 ஆவது போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி 3 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 20 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இத் தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின.
இப் போட்டியில் குசல் ஜனித் பெரேராவின் அதிரடி ஆட்டத்தால் நிலைகுலைந்துபோன இந்தியா தோல்வியை சந்தித்தது.
ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தோல்வி கண்டுள்ள ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இன்று தனது இரண்டாவது போட்டியில் மோதவுள்ளது.
இதில் பங்கேற்றுள்ள மற்றைய அணியான பங்களாதேஷ் அணி தனது முதலாவது போட்டியில் இன்று களம் காண்கின்றது.
இப் போட்டியில் இந்திய அணி எப்படியும் வெற்றிபெற்று தனது தொடரின் அடுத்தகட்டத்திற்கு அணியை எடுத்துச்செல்லவே முயற்சிக்கும்.
மறுமுனையில் பங்களாதேஷ் அணியும் பலம்மிக்க அணியாகக் காணப்படுவதால் இந்தியாவுக்கு சிறந்ததொரு போட்டியைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் காயத்தின் காரணமாக தொடரிலிருந்து விலகியதால் மெஹ்முதுல்லா அணியை வழிநடத்துகிறார்.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரு பிரிவுகளும் சரிசமமாக உள்ளதால் இந்திய அணிக்கு சவால் விடுக்கும் விதத்தில் ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை இந்திய அணியும் முதல் போட்டியில் இலங்கையிடம் அடைந்த தோல்விக்கு பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி கொண்டு தங்களை காத்துக்கொள்ள போராடும்.
இந்திய அணியும் பலமான அணியாக காணப்படுகிறது. துடுப் பாட்டத்தில் ரோஹித், தவான் போன்ற அனுபவ வீரர்களும் பந்து வீச்சில் சஹால், உனாட்கட் மற்றும் சஹால் ஆகியோரும் உள்ளனர்.
ஆக இன்றைய போட்டியில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM