கடந்தகால சம்பவங்களை கருத்திற்கொண்டு, நாட்டின் நிகழ்கால நிலை குறித்து கிளர்ச்சிகளை செய்வதற்கென்ற தாகத்துடன் இருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு மேலும் கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்களை நாம் உருவாக்கிக் கொடுக்காது மனிதபிமானம், புத்தி தெளிவுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டுமென இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் கிளர்ந்துள்ள இந்நிலை குறித்து, நாம் தெளிந்த அறிவுடனும், எதிர்காலத்தை முன்னுணர்ந்து செயற்பட வேண்டும்.

அதேபோல், இறந்தகாலத்தில் ஏற்பட்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு, மனிதபிமானம் நிறைந்தவர்களாயும், புத்தி தெளிவுள்ளவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும். 

பல்வேறுபட்ட இனங்கள் மற்றும் மதத்தவர்கள் பரந்து வாழும் எம் நாட்டில், ஒற்றுமையாக வாழவேண்டும் என வெளிநாட்டவர்கள் எமக்கு சொல்லித்தர தேவையில்லை. அவை எமது மதங்களில் மதிப்பீடுகளிலும், கொள்கைகளிலும் வெளிக்காட்டப்படும் படிப்பினைகளாகும். 

எனவே, நாட்டின் நிகழ்கால நிலை குறித்து கிளர்ச்சிகளை செய்வதற்கென்ற தாகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு மேலும் கிளர்ச்சியை, தீயைப் பற்றியெரியச் செய்ய வாய்ப்புக்களை நாம் உருவாக்கிக் கொடுக்க கூடாது என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். 

இவ்வாறான செயற்பாடுகள் நாட்டுக்கும் மற்றும் மதத்திற்கும் தீங்கையும் அவமானத்தையும் வருவிப்பதோடு, அவற்றிற்கு செய்யும் துரோகமாகவும் அமைகின்றன.

எம் நாட்டின் மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்களிடம், எல்லா விதமான அமைப்புக்களிலிருந்து கேட்டுக் கொள்வது மிகவும் பொறுமையுடனும், பொறுப்புடனும் செயற்பட்டு பயணிக்க வேண்டிய காலம் என்பதை புரிந்துக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதே என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.