இலங்கையின் தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல், இலங்கையின் முன்னணி வகிக்கும் வங்கிகளுள் ஒன்றான கொமர்ஷல் வங்கியுடன் இணைந்து முதன் முறையாக புதிய கடனட்டை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.
ஓர் தொலைத்தொடர்புச் சேவை வழங்குனர், ஓர் நிதி நிறுவனத்துடன் இணைந்து இரு சாராருக்கும் அனுகூலங்கள் பலவற்றை வழங்கக்கூடிய கடனட்டை ஒன்றை இலங்கையில் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க தொலைத்தொடர்பு மற்றும் வங்கித் துறையின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் ஆரம்பமும் இதுவே.
இது இலங்கையின் முதலாவது தனித்துவமான கொம் பேங்க் டேடா கடனட்டையாகும். கடனட்டை நடவடிக்கைகளை கொமர்ஷல் வங்கி கையாள்வதுடன் அதற்கான டேடாவினை மொபிடெல் வழங்குகிறது.
மொபிடெல் எப்பொழுதும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி வகித்து வருகிறது, அதேபோல் தமது வர்த்தக நாமத்தின் உறுதிப்பாடான ‘We Care. Always’க்கு இணங்க புத்தாக்கம் மிக்க மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ICT தீர்வுகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் இலங்கையின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துகிறது.
வாடிக்கையாளரின் மன நிறைவை உறுதிப்படுத்தி வாழ்க்கை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மையமாகக் கொண்டுள்ளது.
இந்த கடனட்டையானது வழமையான சேவைகளை வழங்குவதுடன் மொபிடெல் வாடிக்கையாளர், கடனட்டையை பாவிக்கும் ஒவ்வொரு முறைக்கும் அவரது மொபிடெல் இணைப்புக்கு இலவச டேடாவுடனான தனித்துவமான அனுகூலங்களையும் வழங்குகிறது.
கடனட்டை மூலம் பாவிக்கப்படும் ஒவ்வொரு 1000 ரூபாவுக்கும் வாடிக்கையாளருக்கு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் 50 MBடேடா இலவசமாக வழங்கப்படும். எனவே நீங்கள் கடனட்டையை அதிகமதிகமாக பாவிக்கும் போது அதிகமதிகமாக இணையத்தில் இருந்திடலாம்.
மொபிடெலின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. நளின் பெரேரா கருத்து தெரிவிக்கையில்,
“இத்தொழிற்துறையில் புதிய கண்டுபிடிப்புக்களை முன்னெடுக்கும் பாரம்பரியத்தைக் கொண்ட மொபிடெல் இனரான நாம், கொமர்ஷல் வங்கியுடனான கொம் பேங்க் டேடா கடனட்டையை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
நாட்டில் முன்னணி வகிக்கும் வங்கிகளுள் ஒன்று என்ற வகையில் மாபெரும் வாடிக்கையாளர் தளத்தை இது கொண்டுள்ளதுடன் இக்கடனட்டையானது எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவச டேடா மற்றும் மேலும் பல வெகுமதிகளை அளிக்கக்கூடிய ஒரு புதிய வழியும் ஆகும். இது கடனட்டைக்கு பிறகு அதிகமாக விரும்பப்படும் ஒன்றாக இருந்திடும் என நாம் மிகவும் உறுதியாக நம்புகிறோம்.”
“கொமர்ஷல் வங்கி அட்டைகள்ரூபவ் பல தொழில்துறைகளை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. இது எமது பயணத்தில் இன்னுமொரு மைல்கல்லாகும். இந்த சிறப்பு லோயல்டி அட்டையானது பல பன்முகப்படுத்தப்பட்ட அனுகூலங்களை கொமர்ஷல் வங்கியின் அட்டைதாரருக்கு வழங்குவதுடன் தனித்துவமான சலுகையாக இலவச டேடாவினையும் வழங்குகிறது.
இவ்வாறானதோர் சலுகையை இலங்கையில் வழங்குவது இதுவே முதன் முறையும் ஆகும்.” உலகிலுள்ள முதல் 1000 வங்கிகளில் தொடர்ந்தும் ஏழாவது ஆண்டிலும் தரப்படுத்தல்களுக்கு உட்பட்டுள்ள இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்கிறது. இது 261 கிளைகளையும் 756 ATM களையும் இலங்கை முழுவதும் கொண்டுள்ளது.
கொமர்ஷல் வங்கி அட்டைகள், ஆண்டு முழுவதும் நல்ல வாழ்க்கைத் தரத்துக்கான சலுகைகளை வழங்குவதன் மூலம் சந்தையில் சிறந்த பெறுமதியுள்ள அட்டைகளாக தமது தரத்தை நிலைநிறுத்தியுள்ளது.
மொபிடெல் மற்றும் கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்கள் விமான டிக்கெட்டுக்கள், வைத்திய ஆலோசனைகள், மொபைல் சாதனங்கள், கொமர்ஷல் வங்கியின் வருட இறுதி சலுகைகள் போன்ற மேலும் பலவற்றை இனிவரும் காலங்களில் எதிர்ப்பார்க்கலாம். தமது அட்டைதாரர்களுக்கு மேலும் பலவற்றை நீட்டிக்க தீர்மானித்துள்ளதுடன் மொபிடெல் வாடிக்கையாளர்கள், அஊயளா உடன் கொமர்ஷல் வங்கியின் ‘ஆயஒ டுழலயடவல சுநறயசனள’ மற்றும் மாஸ்டர் அட்டையின் சர்வதேச சலுகைகள் ஆகியவற்றை அட்டையை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். மொபிடெல் 365 வழியாக விமான நிலைய லோன்ஜ்க்கு செல்லுதல் மற்றும் ஏனைய சேவைகள், விமான டிக்கட்டுக்கள் கொள்வனவு செய்வோருக்கு இலவச ரோமிங் சலுகைகள்ரூபவ் வட்டியற்ற திட்டங்கள் போன்ற சலுகைகளும் கிடைக்கின்றன. அட்டைதாரர்கள் கொமர்ஷல் வங்கி வழங்கும் சலுகைகளான சிறப்பு வங்கிக் கணக்கு சலுகைகள்ரூபவ் அட்டை கொடுப்பனவு தெரிவுகள் போன்றவற்றையும் பெற்றுக் கொள்ளலாம்.
மொபிடெல் தொடர்ந்தும் வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்திசெய்வதில் புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. அத்துடன் மொபிடெல் மற்றும் கொமர்ஷல் வங்கியின் கொம் பேங்க் டேடா கடனட்டையின் மூலம் மொபிடெல் மீது வாடிக்கையாளர் கொண்டுள்ள நம்பகத்தன்மையும் நம்பிக்கைக்காகவும் பல வெகுமதிகளையும் வழங்குகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM