இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4 ஆவது ஒருநாள் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி   47.5 ஓவரில்  அனைத்து விக்கெட்டையும் இழந்து 262 ஓட்டங்களை குவித்தது.

சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதம் (109) விளாசினார்.தென்ஆப்பிரிக்கா சார்பில், ரபாடா  4 விக்கெட்டுகளையும், இம்ரான் தாகீர்  3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

வெற்றியிலக்காக 263 ஓட்டங்களை  பெற களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு அம்லா (0) சொதப்பினார்.

அடுத்து வந்த டி காக் (27), டுபிளசி (34), டிவில்லியர்ஸ் (36), டுமினி (31), பெகர்டியன் (38), டேவிட் வைஸ் (21) ஆகியோர் ஓரளவு ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி நேரத்தில் கிறிஸ் மொரிஸ் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த அவர் 38 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர் என 62 ஓட்டங்களை குவித்தார்.

இதனால்,தென்ஆப்பிரிக்கா  47.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 266 ஓட்டங்கள் பெற்று 1 விக்கெட்டால் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-2 என சமன் செய்துள்ளது. போட்டியின் ஆட்டநாயகனான கிறிஸ் மொரிஸ் தெரிவு செய்யப்பட்டார்.