நாட்டில் குழப்ப நிலையை ஏற்­ப­டுத்­து­கின்­ற­வர்கள் தொடர்பில்  தக­வல்கள் கிடைத்தால் 0711261251 என்ற இலக்­கத்­தி­னூ­டாக விசேட மத்­திய நிலை­யத்­திற்கு அறி­யத்­த­ரு­மாறு அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கி­றது. 

இது தொடர்பில் அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளம்­ வி­டுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

நாட்டில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்­துள்­ளது. எவ்­வா­றெ­னினும் சில சந்­தர்ப்­பங்­களில் இன­வாத தரப்­பினர் பல குழப்ப நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அவ்­வாறு திட்­ட­மிட்டு குழப்பம் ஏற்­ப­டுத்தும் நபர்கள் தொடர்பில் ஏதா­வது தக­வல்கள் கிடைத்தால் அவை தொடர்பில் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு ஒரு மத்­திய நிலையம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

பாது­காப்பு படை பிர­தானி அலு­வ­ல­கத்தில் இந்த நிலையம் 24 மணி­நே­ரமும் தொடர்ச்­சி­யாக செயற்­படும். எனவே இவ்­வாறு தக­வல்கள் கிடைத்தால் 0711261251 என்ற இலக்கம் அல்லது helpdesk@dgi.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப் படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.