நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களாகிய குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியார் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு விசேட செய்தியொன்றை பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் குமார் சங்கக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் 

மதத்தை காரணம் காட்டி நீங்கள் எவரும் மற்றவருக்கு தீங்கு ஏற்படுத்தவோ பாதகம் விளைவிக்கவோ முடியாது. 

நாம் எல்லோரும் ஒரே நாட்டு மக்கள். அன்பு , நம்பிக்கை மற்றும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை எம் மக்களின் பழக்கவழக்கங்களாக இருக்க வேண்டும்.

நாம் அனைவரும் இனவாதம் மற்றும் வன்முறைக்கு  ஏதிராக ஒன்றிணைவோம் என அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மஹேல ஜயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில்,

நாட்டில் இடம்பெற்றுவரும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றேன் . இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்ட வேண்டும். 

நான் கடந்த 25 வருடகாலமாக உள்நாட்டு யுத்த சூழலில் வளர்ந்தேன். எமது அடுத்த தலைமுறையாவது இந்த நிலைமையை காணாது உருவாக அனைவரும் ஒத்துழைப்போம் என மஹேல தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.