சமூகவலைத்தளம் மூலம் இலவசமாக பாலியல் உறவு கொள்ள ஆண்களுக்கு அழைப்பு விடுத்த சீனாவைச் சேர்ந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

19 வயதான யே மூயி என்ற இளம் பெண்  சமூகவலைத்தலங்களில் தன்னுடன் இலவசமாக பாலியல் உறவு கொள்ள வேண்டுமா? அதற்கு இந்த விடுதிக்கு வாருங்கள் என விடுதி பெயர் மற்றும் அறையின் இலக்கம்  என்பவற்றை பதிவேற்றியிருந்துள்ளார்.

இவ் விடயம்  சீனாவில் வைரலாக பரவியதால் பலரும் குறித்த விடுதியை  தொடர்புகொண்டு, அப்பெண் பற்றியும் குறித்த அறையில் யார் இருக்கிறார் என விசாரித்திருக்கின்றனர்.

மேலும் பலர் நேரடியாகவே விடுதிக்கு வருகை தந்துள்ளனர். இப்படியாக சுமார் 3,000த்திற்கும் மேற்பட்டோர் தொலைப்பேசி மூலமாக தொடர்புகொண்டும் நேரடியாகவும்  அப்பெண் குறித்து விசாரித்துள்ளனர்.

இதைக் கண்டு திகைத்து போன குறித்த பெண் விளையாட்டிற்காக இப்படி செய்ததாக மீண்டும் ஒரு வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதனால் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த விடுதி  நிர்வாகம் அப்பெண் மீது முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.