கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், மெனிக்கின்ன பகுதியில் அசாதாரண சூழ்நிலைக்கு காரணமாக இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த அசாதாரண சூழ்நிலையினால், மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சுமார் 400 பேர் கொண்ட குழுவினர் குறித்த பிரதேசத்தில் குழப்பம் விளைவிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டதாகவும், இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பொலிஸ் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள திருப்தியற்ற பாதுகாப்பு நிலைமையைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்திலுள்ள அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM