கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 6 மணி வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியிலுள்ள அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.