கண்டி மற்றும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறையினை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு ஹர்த்தாலில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு நகரில் இன்று காலை முதல் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டதுடன் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று இயங்கியதை காணமுடிந்தது.

அனைத்து அரச தனியார் நிறுவனங்களும் வழமைபோன்று செயற்பட்ட நிலையில் கல்முனை மற்றும் அம்பாறை, அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளில் இருந்துவரும் தனியார் அரச பஸ்கள் வராத காரணத்தினால் பேருந்து நிலையத்தில் மக்களின் நடமாட்டம் குறைவான நிலையிலேயே காணப்பட்டது.

எனினும் மட்டக்களப்பில் இருந்து ஏனைய பகுதிகளுக்கான போக்குவரத்துகள் வழமைபோன்று நடைபெற்றதை காணமுடிந்தது.