மலேசியாவில் இருந்து பங்களாதேஷ் சென்ற மலின்டோ ஏர் விமானத்தில் பயணம் செய்த பங்களாதேஷ் மாணவர் அநாகரிகமாக ஆடைகளை களைந்துவிட்டு பணிப்பெண்ணை தாக்கிய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானத்தில் பயணம் செய்த போது தன்னுடைய ஆடைகளை களைந்துவிட்டு மடி கணினியில் ஆபாச படங்களை பார்த்து உள்ளார். 

பின்னர் குறித்த மாணவர் விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று உள்ளார்.  பணிப்பெண் அவருடைய முயற்சிக்கு இடம் கொடுக்காது போராடிய போது  மாணவர் கொடூரமாக தாக்கி உள்ளார்.

உடனடியாக விமானத்தில் இருந்தவர்கள் வாலிபரை பிடித்து,  அவருடைய கையை கட்டி  உள்ளனர். இதனையடுத்து விமானம் டாக்காவில் தரையிறங்கியதும் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.