இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆரம்பமாகின்றது.
இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து 3 நாடுகளுக்கிடையிலான இருபதுக்கு 20 சுதந்திரக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.
இதற்கு முன்னர் 1998ஆம் ஆண்டு இலங்கையின் 50ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இதேபோல் 3 நாடுகள் மோதிய சுதந்திரக் கிண்ணத் தொடர் நடத்தப்பட்டது.
அத் தொடரில் இலங்கை, இந்தியா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் போட்டியிட்டிருந்தன. இத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தொடரை வென்றிருந்தது.
இந்நிலையில் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் முத்தரப்பு சுதந்திரக் கிண்ணத் தொடர் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இலங்கை – இந்திய அணிகள் மோதுகின்றன.
இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமால் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை நுவன் பிரதீப் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளமை கூடுதல் பலமே.
இறுதியாக பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி அங்கு நடைபெற்ற 3 வகையான கிரிக்கெட் தொடர்களிலும் வெற்றிவாகைசூடி 3 கிண்ணங்களுடன் நாடு திரும்பியது.
அந்த உத்ேவகத்தில் உள்ள இலங்கை அணி சுதந்திரக் கிண் ணத் தொடரிலும் சாதிக்கும் முனைப்
புடன் இன்று களம் காண்கின்றது.
உபுல் தரங்க, குஷல் மெண்டிஸ், திஸர பெரேரா, அகில தனஞ்சய ஆகியோர் சிறந்த முறையில் ஆடி வருகின்றனர்.
அதேபோல் பங்களாதேஷுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் துடுப்பாட்ட வீரராக களமிறக்கப்பட்ட தசுன் சானக்க தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணி பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்துவிட்டார்.
இலங்கை அணியின் பயிற்சியாளர் ஹத்துருசிங்கவின் இவ் வியூகம் அணிக்கு சிறப்பாக கைகொடுத்தது. அதனால் இன்றைய போட்டியிலும் தசுன் சானக்க இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக களமிறக்கப்படலாம்.
காயம் காரணமாக இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் இத் தொடரில் ஆடவில்லை.
அதிரடி ஆட்டக்காரரும் விக்கெட் காப்பாளருமான திக்வெல்லவும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் குசல் ஜனித் பெேரரா உள்ளே வந்துள்ளார்.
அதேபோல் இந்திய அணி யைப் பொறுத்தவரையில்
தலைவர் விராட் கோஹ்லி, டோனி, புவனேஷ்வர்குமார், பும்ரா, குல்தீப் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா போன்ற முன்னணி வீரர்களுக்கு இத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியை ரோஹித் ஷர்மா வழிநடத்திச் செல்கிறார். அவர் தலைவராக இருந்த 4 இருபதுக்கு 20 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றியை பெற்றுக்கொடுத்து சாதனை புரிந்துள்ளார். இதே நிலையைத் தக்க வைத்துக் கொள்ள அவர் கடுமையாக போராடுவார்.
தவான், ரெய்னா, மனிஷ் பாண்டே, ராகுல், சாஹல், அக்ஷர் பட்டேல் போன்ற சிறந்த வீரர்களும் அணியில் உள்ளனர்.
பங்களாதேஷ் அணிக்கு மெஹ்முதுல்லா தலைவராக உள்ளார். அந்த அணியின் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான சகிப்- அல் – -ஹசன் காயத்தால் விலகியமை பங்களாதேஷுக்கு பெரும் பாதிப்பே.
முஷ்பிகூர் ரஹீம், தமிம் இக்பால், முஸ்தபிஸுர் ரஹ்மான் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
சமபலம் மிக்க மூன்று நாடுகள் இத் தொடரில் பங்கேற்றுள்ளமையால் சுதந்திரக் கிண்ணத் தொடர் கிரிக்கெட் விருந்து படைக்கும் என்பது திண்ணம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM