10 அணிகள் பங்குகொள்ளும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிகாண் போட்டித் தொடர் ஸிம்பாப்வேயில் இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2019 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி முதல் ஜூலை 14 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி ஐ.சி.சி. சர்வதேச ஒருநாள் அணிகளின் தரவரிசைப்படி முதல் 8 இடங்களை வகித்த தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றன.
முன்னாள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி தரவரிசையில் 9 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டதால், நேரடியாக தகுதி பெற முடியவில்லை.
ஆகையால், 10 அணிகள் மாத்திரம் பங்குகொள்ளும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான எஞ்சிய இரு அணிகள் தகுதி சுற்று மூலம் தெரிவு செய்யப்படவுள்ளன. ‘ஏ’ பிரிவில் அயர்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஐக்கிய அரபு இராச்சியம், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஹொங்கொங், நேபாளம், ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
தகுதி சுற்றில் முதல் நாளான, இன்றைய தினம் 4 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஆப்கானிஸ்தான்-ஸ்கொட்லாந்து, பப்புவா நியூ கினியா-ஐக்கிய அரபு இராச்சியம், அயர்லாந்து-நெதர்லாந்து, ஸிம்பாப்வே,-நேபாளம் ஆகிய அணிகள் மோதுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM