மட்டக்களப்பில் இருந்து வாகரை ஊடாக திருமலை நோக்கி சென்ற கார் ஒன்று காயான்கேணி எனும்  இடத்தில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து  எதிரே இருந்த மின்கம்பத்துடன் மோதி  விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

 இன்று சனிக்கிழமை  மாலை காயான்கேணி இறால் பண்ணைக்கு முன்பாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காரில் பயணம் மேற்கொண்ட ஒரே குடும்ப்தினை சேர்தவர்களே இவ்விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மனைவிக்கு முகப்பகுதியில் சிறிது காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கணவன் 3 வயதுடைய பிள்ளை மற்றும் பிறந்து 20 நாள் நிரம்பிய பிள்ளையும்  அதிஷ்டவசமாக  காயம்  எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய கார் தீ பற்றி எரிந்த வேளை எதிரே இருந்த இறால் பண்ணை ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு நீரினை ஊற்றி தீயானது மேலும் பரவாமல் தடுத்து பாதுகாத்துள்ளனர்.

 பாதிக்கப்ட்டோர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.