சிரியாவில் இடம்பெறும்  மனித குலத்திற்கு எதிரான படுகொலையை கண்டித்து  மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Priyatharshan

03 Mar, 2018 | 09:47 PM
image

சிரியாவில் இடம் பெற்று வரும்  மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டித்து இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கண்டணப்போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில்  குறித்த போராட்டம் இடம் பெற்றது.

சிரியாவில் இடம் பெற்று வரும்  மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டிக்கும் வகையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிரியாவில் குழந்தைகள் முதல் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட மற்றும் அவர்களின் துன்ப துயரங்களை எடுத்துக்காட்டுகின்ற புகைப்படங்களை ஏந்தியவாறு கண்டனப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் மூர்வீதி ஜும்மா பள்ளி வாசல் மௌலவி எம்.அசீம்,மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன்,மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்பட்ட மகஜர்  வாசிக்கப்பட்டு உரிய அதிகாரிகளினூடாக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31