அவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடை­பெ­ற­வுள்ள கொமன்வெல்த் நீச்சல் பிரிவு போட்­டி­க­ளுக்­கான இலங்கை அணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அறி­விக்­கப்­பட்­டுள்ள இலங்கை அணி மொத்தம் ஆறு வீரர்­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது. இதில் நான்கு வீரர்­களும் இரண்டு வீராங்­க­னை­களும் இடம்­பெற்­றுள்­ளனர்.

பொது­ந­ல­வாய நாடு­க­ளுக்­கி­டையில் நடத்­தப்­படும் பொது­ந­ல­வாய விளை­யாட்டுப் போட்­டிகள் (கொமன்வெல்த்) எதிர்­வரும் ஏப்ரல் மாதம் நான்காம் திகதி அவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இந்தத் தொட­ருக்­காக அறி­விக்­கப்­பட்­டுள்ள நீச்சல் வீரர்­களில் 2016 றியோ ஒலிம்­பிக்கில் இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய மெத்யூ அபே­சிங்க மற்றும் கிமிகோ ரஹீம் ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர்.

இவர்கள் இரு­வரும் கடந்த 2016ஆம் ஆண்டு இந்­தி­யாவின் அசாம் மாநி­லத்தில் நடை­பெற்ற தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­களில் சாதனை படைத்த வீரர்­க­ளாவர்.

அதே­வேளை மெத்யூ அபே­சிங்க, அண்­மையில் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஒஹி­யோவில் நடை­பெற்ற திறந்த நீச்சல் போட்­டி­களில் ஆண்­க­ளுக்­கான 100 மீற்றர் சாதா­ரண நீச்­சலில் 5ஆவது இடத்­தையும், 200 மீற்றர் சாதா­ரண நீச்­சலில் 18ஆவது இடத்­தையும் பெற்றார். இதனால், பொது­ந­ல­வாய நாடு­க­ளுக்­கான போட்­டி­களில் விளை­யாடும் வாய்ப்பை மெத்யூ பெற்­றுக்­கொண்டார்.

அதே­போல இலங்கை நீச்சல் அணியில் கிமிகோ ரஹீம், கைல் அபேசிங்க, செரன்த டி சில்வா, அகலன்க பீரிஸ், வினோலி களுஆரச்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.