தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்குள் ஏற்­பட்­டுள்ள குழப்­பத்­தை­ய­டுத்து, கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் ஆனந்த சங்­க­ரிக்கு எதி­ராக யாழ்.பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் புதிய தலை­வ­ராக கடந்த வருடம் தெரி­வு­செய்­யப்­பட்ட சிவ­சுப்­பி­ர­ம­ணி­யத்­தினால் செய­லாளர் நாய­கத்­திற்கு எதி­ராக இந்த முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. 

 கூட்­ட­ணியின் உயர்­மட்ட கூட்­ட­மொன்று யாழ்.நாச்­சிமார் கோவில் வீதியில் உள்ள கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்­றது. இக் கூட்­டத்­திற்கு கூட்­ட­ணியின் தலைவர் சிவ­சுப்­பி­ர­ம­ணி­யத்­திற்கு அறி­வித்தல் வழங்­கப்­ப­ட­வில்லை. இருந்­த­போதும் அக்கூட்­டத்­திற்கு சென்ற தலை­வரை கூட்­டத்தில் பங்­கு­கொள்­வ­தற்கு செய­லாளர் நாயகம் ஆனந்­த­சங்­கரி அனு­ம­திக்­க­வில்லை. இதனால் குறித்த இரு­வ­ருக்கும் இடையில் முரண்­பாடு ஏற்­பட்­டது. இந்­நி­லையில் ஆனந்­த­சங்­கரி மற்றும் சிவ­சுப்­பி­ர­ம­ணி­யத்­திற்கு இடையில் ஏற்­பட்ட வாய் தர்க்­கத்­தை­ய­டுத்து தலை­வ­ரினால் யாழ்.பொலிஸ் நிலை­யத்தில் ஆனந்­த­சங்­க­ரிக்கு எதி­ராக முறைப்­பாடு பதி­வு­ செய்­யப்­பட்­டது.

அம் முறைப்­பாட்டில், தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் ஆனந்­த­சங்­கரி தன்னை தகாத வார்த்­தை­களால் பேசி­ய­தா­கவும், தனது சேட்டை பிடித்து  தாக்க முற்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இம்­மு­றைப்­பாட்டை அடுத்து மேல­திக விசா­ர­ணை­களை யாழ்.பொலிஸார் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இதே­வேளை இச் சம்­பவம் தொடர்­பாக கூட்­ட­ணியின் தலைவர் சிவ­சுப்­பி­ர­ம­ணியம் தெரி­விக்­கையில், 

தற்­போது கட்­சியின் செயற்­பா­டுகள் தன்­னிச்­சை­யான முடி­வு­களின் அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும், கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தலின் போது ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தமக்கு தெரியப்படுத்தப்படவில்லை எனவும் இவ்வாறான நிலையிலேயே இன்றைய (நேற்றைய) சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.