இந்து சமுத்­திர பிராந்­தி­யத்தை அடிப்­ப­டை­யாகக்கொண்டு வளர்ச்­சி­ய­டையும் புதிய பொரு­ளா­தார பய­ணத்தின் பங்­கா­ளர்­க­ளாக வரு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சிங்­கப்பூர் உட்­பட உலக முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு அழைப்பு விடுத்தார்.

எதிர்­வ­ரும் காலங்­களில் இந்­தி­யா­வுடன் தற்­போது கைச்­சாத்­திட்­டுள்ள சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தத்தை மேலும் பல­மாக்கி பொரு­ளா­தார மற்றும் தொழில்­நுட்ப ஒத்­து­ழைப்பு ஒப்­பந்­தத்­தையும் (எட்கா) சீனா­வுடன் விஸ்­தீர சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்தத்­தையும் கைச்­சாத்­தி­ட­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

சிங்­கப்பூர் சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கொழும்பு பங்குச் சந்­தையின் ஏற்­பாட்டில் போ சீசன்ஸ் ஹோட்­டலில் நடை­பெறும் இன்வஸ்ட் ஸ்ரீலங்கா மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இந்த மாநாட்­டிற்கு இலங்கை மத்­திய வங்கி ஆளுநர் இந்­தி­ரஜித் குமா­ர­சு­வாமி, கொழும்பு பங்கு சந்­தையின் தலைவர் ரே.அபே­கு­ண­வர்­தன, சிங்­கப்பூர் வர்த்­தக சம்­மே­ள­னத்தின் பெரு­ளாளர் லோரன்ஸ் லியோ, கொழும்பு நிதி நக­ரத்தின் பிர­தான விநி­யோக அதி­காரி லியேங் தோ மிங் உட்­பட முத­லீட்­டா­ளர்கள் பலரும் கலந்து கொண்­டனர்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

உலகில் வேக­மாக வளர்ச்­சி­ய­டையும் தென்­ஆ­சி­யாவின் வர்த்­த­கத்­திற்கு உகந்த தள­மாக இலங்கை மாறி­யுள்­ளது. 

உலக பொரு­ளா­தார சுழற்­சியில் பொரு­ளா­தா­ரத்தின் கேந்­தி­ர­மாக இந்து சமுத்­திரம் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. இதன்­படி இலங்­கையை பெள­தீக அமை­வி­ட­மாக கொண்டு பொரு­ளா­தார ரீதி­யாக தொடர்­பு­களை பேணி இந்து சமுத்­தி­ரத்தின் கேந்­தி­ர­மாக மாற்றிக் கொள்­வ­தற்கு இலங்­கைக்கு வாய்ப்பு கிட்­டி­யுள்­ளது.

சீனா முதல் ஸ்பெயின் வரை வசிக்கும் 3 பில்­லியன் மக்­களின் தேவையை பூர்த்தி செய்­வ­தற்கு பொருள் மற்றும் பொருள் சேவை­களை விநி­யோகம் செய்­வ­தற்­கான இந்து சமுத்­தி­ரத்தின் கேந்­திர நிலை­ய­மாக இலங்கை உள்­ளது. இதன்­படி இலங்­கையின் பூகோள அமை­வி­டத்தின் இலா­பத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்கு உலக முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு சிறப்­பான வாய்ப்பு கிட்­டி­யுள்­ளது. அத்­து­டன பிராந்­தி­யத்தில் உரியஅமை­வி­டத்தை இலங்கை பெற்­றுள்­ளமை பெரும் பல­மாகும்.

ஜப்பான் முன்­வைத்த இந்து சுதந்­திர மற்றும் திறந்த சமுத்­திர போக்­கு­வ­ரத்து திட்­டத்­திற்கும் இந்­தி­யாவின் அய­ல­வர்­க­ளுக்கு முன்­னிலை என்ற கொள்­கைக்கும் சீனாவின் ஒரு திரை ஒரு பாதை என்ற பட்­டு­பாதை ஆகிய மூன்று திட்­டங்­களின் பிர­காரம் செயற்­ப­டு­வ­தற்கு இலங்கை தயா­ராக உள்­ளது. தற்­போது குறித்த திட்­டங்­களை நிலை­நாட்­டு­வ­தற்கு முக்­கிய செயற்­பா­டு­களை இலங்கை எடுத்­துள்­ளது.

2018 ஆம் ஆண்டு சிங்­கப்­பூ­ருடன் கைச்­சாத்­தி­டப்­பட்ட சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­த­மா­னது இலங்­கையின் பொரு­ளா­தார ரீதி­யான தீர்­மா­னம்­மிக்க செயற்­பா­டாகும். இன்வஸ்ட் ஸ்ரீலங்கா திட்­டத்­திற்கு பெரும்­பா­லான நிறு­வ­னங்கள் ஆர்வம் கொண்ட போதிலும் மாநாட்­டிற்­கான பிர­தி­நி­தித்­துவம் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­மையின் கார­ண­மாக நிறு­வ­னங்கள் பல­வற்­றிற்கு வாய்ப்பு கிட்­டாமல் போனது.

இந்­நி­லையில் சிங்­கப்பூர் வர்த்­த­கர்­க­ளுக்கு கிழக்கு ஆசிய மற்றும் தென்­ஆ­சி­ய­வுடன் நெருங்­கிய தொடர்­பு­களை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு இந்து சமுத்­திரம் அதிஷ்­ட­மா­ன­தாக அமையும் என்­பது எமது நம்­பிக்­கை­யாகும்.

உலக வங்­கியின் தென்­ஆ­சி­யாவின் நோக்­கத்­திற்கு அமை­வாக வளர்ச்­சி­மிகு பொரு­ளா­தாரம் மீண்டும் சாத­க­மான நிலைக்கு வந்­துள்­ளது. தென்­ஆ­சிய உற்­பத்­திக்­கான கேள்­விகள் அதி­க­ரித்த வண்­ண­முள்­ளன. உலக வங்­கியின் திட்­டத்­திற்கு அமை­வாக இலங்கை அதற்கு சமாந்­த­ர­மான முறை­மையை அமுல்ப்­ப­டுத்தி வரு­கின்­றது. இதன்­படி பொரு­ளா­தா­ரத்தை நிலை­நாட்­டு­வ­தற்கு உரிய நட­வ­டிக்கை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

தற்­போது இலங்கை கடனை மைய­மாக கொண்டு உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி நாடாக இருந்து தற்­போது தனியார் வர்த்­தக ஏற்­று­மதி மற்றும் நேரடி வெளி­நாட்டு முத­லீ­டு­களை மைய­மாக கொண்டு செயற்­படும் நாடாக மாறி­யுள்­ளது. அபி­வி­ருத்­தியை மைய­மாக கொண்டு தொழில்­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்பு தொடர்­பாக அர­சாங்கம் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது. இதன்­ஊ­டாக அதிக மத்­திய தர வரு­மானம் பெறும் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­ப­வுள்ளோம்.

இந்து சமுத்­தி­ரத்தில் போட்டி தன்­மை­யுடன் கூடிய பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்­கு­வதே இலங்­கையின் நோக்­க­மாகும். எமது நோக்­கத்தில் வெற்றி அடை­வ­தற்கு உற்­பத்தி மற்றும் சேவை­களை அதிக தரத்­துடன் சந்­தையில் வழங்­கியே ஆக வேண்டும். இதன்­படி ஏற்­று­மதி வரு­மா­னத்தை அதி­க­ரிக்க வேண்டும். மேலும் நாடு என்ற வகையில் சீரான நிதி செயற்­பா­டுகள் , நவீன தொழில்­நுட்ப மற்றும் செயற்­தி­றன்­மிக்க சந்­தைக்குள் நுழைய வேண்டும். இதற்­காக வெளி­நாட்டு முத­லீ­டுகள் மீதான ஈர்ப்பு எமக்கு அத்­தி­யா­வ­சிய தேவை­யாக உள்­ளது. இதனை அர­சாங்கம் புரிந்து கொண்­டுள்­ளது.

உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு முத­லீ­டு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக கொள்கை ரீதி­யான நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். 2018 ஆம் ஆண்டின் போது வர்த்­தகம் செய்­வ­தற்­கான வாய்ப்­பினை நாம் வழங்­கி­யுள்ளோம். நடப்­பாண்டின் நடுப்­ப­கு­தி­யாகும் போது புதிய வர்த்­த­கங்­களை செயற்­பா­டு­களை பதிவு செய்­வ­தற்­காக எடுக்க கால நேரத்தை 6 நாட்­களில் இருந்து ஒரு நாளாக குறைக்­க­வுள்ளோம். சொத்­து­களை பதிவு செய்யும் காலத்தை 51 நாளில் இருந்து 26 நாட்­க­ளாக குறைக்­க­வுள்ளோம். அதற்­கான படி­மு­றை­களை 9 கட்­டங்­களில் இருந்து 2 கட்­டங்­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­த­வுள்ளோம்.

மேலும் குறு­கிய காலத்­திற்குள் வர்த்­தக ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு இலத்­தி­ர­னியல் மாநாடு ஒன்­றையும் நடத்­த­வுள்ளோம். துறை­முக நகர் அபி­வி­ருத்தி திட்­டத்தை நிதி நக­ர­மாக மாற்றி விசே­ட­மான பொரு­ளா­தார வல­ய­மாக பரி­மாற்­ற­வுள்ளோம். உலக முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு எந்­த­வொரு நாட்­டிலும் கிடைக்­காத சாத­க­மான சூழலை இதன்­ஊ­டாக ஏற்­ப­டுத்தி தருவோம். இதன் சட்ட ரீதி­யான ஏற்­பா­டுகள் தற்­போது தயா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வ­ரு­டத்தின் நடுப்­ப­கு­தியில் அதனை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம்.

இதே­வேளை அமெ­ரிக்கா, ஐரோப்பா ஒன்­றியம், இந்­தியா, சீனா, சிங்­கப்பூர்,ஜப்பான், மலே­சியா, தாய்­லாந்து மற்றும் இந்­தோ­னே­ஷியா ஆகிய நாடு­க­ளுடன் வர்த்­தக மற்றும் முத­லீட்டு தொடர்­பு­களை வலுப்­ப­டுத்­த­வுள்ளோம்.

இவ்­வ­ருடம் சிங்­கப்­பூ­ருடன் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்தை கைச்­சாத்­திட்டோம். இதன்­படி சுமார் 10 வரு­டங்­களின் பின்னர் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­த­மொன்றை எம்மால் கைச்­சாத்­திட முடிந்­தது. இதன்­ஊ­டாக பொருள், சேவை, இலத்­தி­ர­னியல் வர்த்­தக,நிதி சேவை­களை பரி­மாறிக் கொள்ள எம்மால் முடியும். அத்­துடன் இன்னும் இரண்டு சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தங்­களை கைச்­சாத்­தி­டு­வ­தற்கு நாம் எதிர்­பார்த்­துள்ளோம். இதன்­படி இந்­தி­யா­வுடன் தற்­போது கைச்­சாத்­திட்­டுள்ள சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­ததை மேலும் பல­மாக்கி பொரு­ளா­தார மற்றும் தொழில்­நுட்ப ஒத்­து­ழைப்பு ஒப்­பந்­தை­தையும் (எட்கா) சீனா­வுடன் விஸ்­தீர சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்தை கைச்­சாத்­தி­ட­வுள்ளோம்.

மேலும் ஜி.எஸ்.பி பிளஸ் சலு­கையின் ஊடாக பொரு­ளா­தார ரீதி­யாக சாத­க­மான நிலை­மைக்கு எம்மால் வர முடிந்­தது. தென் ஆசி­யாவின் ஐந்து நாடு­க­ளுக்கு ஒரு மணி­நே­ரத்தில் பய­ணிக்க முடியும். இதன்­படி அதன் இலா­பத்தை எம்மால் பெற்­றுக்­கொள்ள முடியும். இலங்­கையின் அமை­வி­டத்தின் ஊடாக சீனாவின் பட்­டு­பாதை திட்­டத்தை சாத­க­மான நிலை­மைக்கு கொண்டு வர முடியும்.

அத்­துடன் இலங்­கையில் இன்னும் மூன்று பாரிய கைத்­தொழில் வல­யத்தை உரு­வாக்­க­வுள்ளோம். நாடு­பூ­ரா­கவும் சுற்றுலா வலயத்தை உருவாக்கவுள்ளோம். உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யவுள்ளோம். எமது அரசாங்கமானது இலங்கையில் மூன்று சர்வதேச விமான நிலையங்களையும் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்து சர்வதேச அளவிலான விமான மற்றும் துறைமுக போக்குவரத்தை வளர்ச்சிக்கு உட்படுத்தவுள்ளது.

அடுத்த மாதமாகும் போது தேசிய இறைவரி சட்டத்தை அமுல்ப்படுத்தவுள்ளோம். இதன்ஊடாக நவீனமான, ஒழுங்குவிதிமுறைகளுடன் கூடிய வருமான வரி கொள்கையொன்று உருவாகும். ஏனைய நாடுகளை விடவும் வருமான வரி வீதம் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. இதன்படி வட் வரி மறுசீரமைப்பினை செய்யவுள்ளோம். அத்துடன் எமது நாட்டின் பொருள் ஏற்றுமதி 10.7 வீதமாக அதிகரிக்கவுள்ளது.

ஆகவே இந்து சமுத்திர பிராந்திய வளர்ச்சியாகும் புதிய பொருளாதாரத்தின் பங்காளர்களாக வருமாறு அழைப்பு விடுகின்றேன் என்றார்.