(இராஜதுரை ஹஷான்)

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அழுத்தத்தின் காரணமாகவே காணாமல் போனோர் அலுவலகத்திற்கான உறுப்பினர்கன் தெரிவு அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல, இறுதிகட்ட போரை மையப்படுத்தி  இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் தயாராவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்காக போராடி உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரை காட்டிக்கொடுக்க த்துணிந்ததை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்து , அதற்கெதிராக தமது எதிர்ப்பினையும் கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வெளிப்படுத்தினர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் தேசிய அரசாங்கம் உண்மையினை கண்டிறிந்து . கடந்த கால அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்று நிரூபிப்பதுடன்,  பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உறவுகள் எதிர்பார்த்திருக்கும் நோக்கங்களும் நிறைவேற வேண்டும் என தெரிவித்தார்.

காணாமல் போனோர் குறித்து விசாரனைகளை மேற்கொள்ளும் காரியாலயத்திற்கு ஆணையாளர்கள் நியமித்துள்ளமை தொடர்பில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.