யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலிருந்து கடத்த முற்பட்ட 10 கிலோ கேரள கஞ்சாவை நெல்லியடி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இரவு நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலையடுத்து வதிரி பகுதியில் வைத்து வீட்டொன்றில் இருந்து குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

 இதன்போது பிரதான சந்தேகநபர் தப்பிச் சென்ற நிலையில் அங்கிருந்த ஏனைய 5 சந்தேகநபர்களும் பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 கிலோ கேரள கஞ்சா மற்றும் சிறிய ரக வாகனமொன்று, முச்சக்கரவண்டி ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.