புசல்லாவை - உடகம அடபாகே பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்தமையானது அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை நடன பயிற்சி அறைக்கு அருகில் மயக்கமுற்ற மாணவியை கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்த போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் மில்லகஹவத்த, பன்விலதென்ன பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவி உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத போதும் மேலதிக விசாரணைகளை  புசல்லாவை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.