வவுனியவில் புதையல் தோண்டிய மூவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாகவும் மேலும் மூவர் தப்பி ஓடியுள்ளதாகவும் நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நெளுக்குளம் பொலிசாருக்கு நேற்று இரவு 9.30 மணியளவில் சாம்பல்தோட்டம் பகுதியில் புதையில் தோண்டுவதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், நெளுக்கும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. எம். அத்தநாயக்கா தலைமையில் சென்ற குழுவினர் சாம்பல் தோட்டம் மைதானப்பகுதி ஒன்றில் புதையல் தோண்டிய மூவரைக்கைது செய்துள்ளதுடன் மேலும் அங்கிருந்த மூவர் தப்பி ஓடியுள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் தப்பி ஓடிய மூவரையும் பொலிசார் தேடிவருவருகின்றனர்.
புதையல் தோண்டுவதற்குப்பயன்படுத்திய மண்வெட்டிகள், அலவாங்கு, பிக்கான் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கூமாங்குளம், நெளுக்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் இவர்கள் மூவரும் 23 மற்றும் 32 வயதுடையவர்களெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த மூவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM