பிரான்ஸ் நாட்டில் பாடசாலை பேருந்து மீது லொறி ஒன்று மோதியதில் அதில் பயணம் செய்த  6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று காலை 7.15 மணியளவில் இந்த பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளாகியது. தனியார் பாடசாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று 17 மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.

சில நிமிடங்களுக்கு பிறகு, பாடசாலை பேருந்து சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது, எதிரே வந்த லொறி ஒன்று பாடசாலை பேருந்தின் பக்கவாட்டு பகுதியை மிகக்கோரமாக உரசி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

மேலும், இருவர் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.