குசல் ஜனித் வந்ததால் திக்வெல்லவுக்கு இடமில்லை

Published By: Robert

02 Mar, 2018 | 11:22 AM
image

சுதந்­திரக் கிண்ண முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 தொட­ருக்­கான இறுதி இலங்கை அணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் இலங்கை அணியின் விக்கெட் காப்­பா­ளரும் துடுப்­பாட்ட வீர­ரு­மான நிரோஷன் திக்­வெல்ல இறுதி 15 பேர் கொண்ட அணியில் இடம்­பெ­ற­வில்லை.

ஆனால் கடந்த சில தொடர்­களில் ஆடாமல் இருந்த குசல் ஜனித் பெரேரா காயத்­தி­லி­ருந்து மீண்டு வந்து மீண்டும் அணியில் இடம்­பி­டித்­துள்ளார்.

இலங்கை -– இந்­தியா – பங்­க­ளாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் மோதும் சுதந்­திரக் கிண்ண இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இத் தொடரின் முத­லா­வது போட்­டியில் இலங்­கையும் இந்­தி­யாவும் பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன.

இத் தொட­ருக்­கான இரு­பது பேர் கொண்ட உத்­தேச அணி­யொன்று கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அறி­விக்­கப்­பட்­டது. அந்த வீரர்கள் பட்­டியல் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரின் அனு­ம­திக்­காக அனுப்­பி­வைக்கப்பட்­டி­ருந்­தது. 

இந்­நி­லையில் நேற்­று­முன்­தினம் இரவு 15 பேர் கொண்ட இறுதி அணியை இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­தது.

அதன்­படி முதலில் இரு­பது பேர் கொண்ட அணியில் இடம்­பெற்­றி­ருந்த நிரோஷன் திக்­வெல்ல இறுதி அணியில் இடம்­பெ­ற­வில்லை.

அத்­தோடு குசல் ஜனித் பெரேரா அந்த இடத்தைப் பிடித்­துள்ளார். அதி­ரடி ஆட்­டக்­கா­ரர்­க­ளான இரு­வரும் விக்கெட் காப்­பா­ளர்கள் என்­பதும் விசேட அம்­ச­மாகும்.

அந்­த­வ­கையில் அறி­விக்­கப்­பட்­டுள்ள இறுதி 15 பேர் கொண்ட அணியில் தினேஷ் சந்­திமால் (அணித் தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குண­தி­லக, குசல் மெண்டிஸ், தசுன் சானக்க, குசல் ஜனித் பெரேரா, திஸர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், சுரங்க லக்மால் (உப தலைவர்), இசுரு உதான, அகில தனஞ்சய, அமில அபொன்சோ, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, தனஞ்சய டி சில்வா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04