மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் மாவடிவேம்பு பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கள் விபத்தில் இளைஞனொருவர் பலியாகியுள்ளதுடன் மேலுமொருவர் காயமடைந்துள்ளதாக ஏறாவுர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கிரான் விஷ்ணு ஆலய வீதியைச் சேர்ந்த குணராசா குணநிதன் (21) என்ற இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளார்.

கிரானிலிருந்து தனது நண்பன் சகிதம் மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு நோக்கி வேகமாக வந்த குறித்த இளைஞன் மாவடிவேம்பு பதியில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு அருகிலிருந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பாக ஏறாவுர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.