சட்டத்திற்கு முரணான வகையில் 11 மாடுகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றை மடக்கிப்பிடித்த களுவாஞ்சிகுடி பொலிஸார் மாடுகளையும் லொறியையும் மீட்டதுடன் சாரதி உட்பட இருவரை கைதுசெய்துள்ளனர்.

வாழைச்சேனையில் இருந்து கல்முனைக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மாடுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.