தேசிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வியாபாரிகளை வலுவூட்டும் இணைந்த 100 கடன் முன்மொழிவுத்திட்டங்களை உள்ளடக்கிய விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்றை இன்னும் சில மாதங்களில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கினார். 

Image result for மைத்ரிபால சிறிசேன

அரச வங்கிகளின் தலைவர்களுடன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார். 

தேசிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், வர்த்தகர்களை வலுவூட்டி நாட்டின் தேசிய கைத்தொழில் துறையில் புத்தெழுச்சியை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். இன்னும் சில மாதங்களில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சித் திட்டம் குறித்த அறிக்கையொன்றை எதிர்வரும் இரண்டுவார காலப்பகுதியில் தனக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நிதி அமைச்சிடம் தெரிவித்தார்.

 அரச வங்கிகளினூடாக ஈட்டப்படும் இலாபங்கள் எவ்வளவு தூரம் மக்களைச் சென்றடைகின்றது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, குறித்த நன்மைகள் பொருளாதார செயன்முறையில் சாதாரண மக்களையும் தொழில் முயற்சியாளர்களையும் சென்றடைவதற்கான திட்டங்கள் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.