அமெ­ரிக்க  டெக்ஸாஸ் மாநி­லத்தைச் சேர்ந்த   பச்சை குத்­து­வதில் நாட்­ட­மு­டைய பெண்­ணொ­ருவர் உலகில் தனது உடலை அதி­க­ளவில் மாற்­றி­ய­மைத்த ஒருவர் என்ற பெயரைப் பெறு­கிறார்.

புருனி  பிராந்­தி­யத்தைச் சேர்ந்த ஈவா தியமத் மெதுஸா என்ற மேற்­படி பெண் ஆணாக இருந்து பெண்­ணாக மாறிய ஒருவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஆணாக இருந்த போது அவ­ரது பெயர் றிச்சர்ட்  ஹெர்­னாண்டஸ் என்­ப­தாகும்.

இந்­நி­லையில்  அவர் 60,000  அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான பணத்தைச் செல­விட்டு புராணக் கதை­களில் வரும் ட்ரகன் என அழைக்­கப்­படும் நெருப்பைக் கக்கும் விலங்­கினம் போன்று  தனது  முகத்­தையும் உட­லையும்  மாற்றும் வகையில்  பச்சை குத்திக் கொண்­டுள்ளார். 

அத்­துடன் அவர்  தனது நாக்கை பாம்பின் நாக்கு போன்று  மாற்ற நாக்கின் முன்­ப­கு­தியில்  பிளவை ஏற்­ப­டுத்­தி­யுள் ளார்.

அவர் தனது தலையின் முன் பக்­கத்தில் கொம்பு போன்ற அமைப்­பு­க­ளையும்   அறுவைச் சிகிச்சை மூலம் ஏற்­ப­டுத்திக் கொண்­டுள்ள­துடன் தனது காதின்   வெளிப் பாகங்­க­ளையும் வெட்டி  அகற்­றி­யுள்ளார். தனது இந்த நட­வ­டிக்கை தொடர்பில் ஈவா கூறு­கையில்,  நான் மனி­த­னாக இறக்க விரும்­ப­வில்லை என்று தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து  தனது உடலில் மேலும் மாற்­ றங்­களை ஏற்­ப­டுத்த சுமார் 40,000 அமெ­ரிக்க டொலர் செலவில்  சத்­திர சிகிச்­சை­களை மேற் ­கொள்ளத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு ­கி­றது.