களத்தில் ஆக்ரோஷமாக செயற்படுவதில் கோஹ்லி சற்று அதிகமாகவே நடந்து கொள்கிறார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வோக் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட் தொடரை இழந்தாலும் (1–2), அடுத்து நடந்த ஒருநாள் (5–1), இருபதுக்கு–20 (2–1) தொடர்களை கைப்பற்றி அசத்தியது. ஒருநாள் தொடரில் துடுப்பாட்டத்தில் அசத்திய இந்திய அணித் தலைவர் கோஹ்லி, 558 ஓட்டங்களைக் குவித்தார்.
இதுகுறித்து ஸ்டீவ் வோக் கூறியதாவது,
தென்னாபிரிக்க தொடரில் கோஹ்லியின் செயற்பாடுகளை பார்த்தேன். இங்கு சற்று அதிகமாகத்தான் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார் என்று நினைக்கிறேன்.
தலைவர் பணியில் தற்போதும் கோஹ்லி கற்றுக் கொண்டு தான் வருகிறார்.
தனது அதிகப்படியான எதிர்பார்ப்புகள், உணர்ச்சிகளை குறைத்துக் கொள்ள, அவருக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படும். அணியிலுள்ள மற்ற வீரர்களும் தன்னைப் போல, அதே வேகத்துடன் விளையாட மாட்டார்கள் என்ற உண்மையை கோஹ்லி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டீவ் வோக் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM