இலங்கை -– இந்தியா- – பங்களாதேஷ் ஆகிய நாடுகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இலங்கை அணி வெற்றிப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் இந்த சுதந்திரக் கிண்ணத் தொடர் குறித்து ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகி 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இத் தொடருக்கான மூன்று நாடுகளின் அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் மூத்த வீரர்கள் சிலர் இத் தொடரில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் விராட் கோஹ்லி, டோனி, பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரின் ஓய்வால் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் மதிப்பிழக்காது என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இ–20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆரம்பமாக வுள்ளது.
இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் தென்னாபிரிக்க தொடரில் தொடர்ந்து விளையாடிய காரணத்தாலும், ஐ.பி.எல். தொடருக்குப்பின் தொடர்ந்து வெளிநாட்டு தொடர்கள் இருப்பதாலும் அணித் தலைவர் விராட் கோஹ்லி, விக்கெட் காப்பாளர் டோனி, ஹர்திக் பாண்டியா, வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர் குமார், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையில் இந்தியா இத் தொடரை சந்திக்கிறது.முன்னணி வீரர்கள் இல்லாததால் தொடருக்கு முக்கி யத்துவம் இருக்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில், வீரர்கள் ஓய்வால் முத்தரப்பு இருபதுக்கு 20 தொடர் மதிப்பிழக்காது என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால கூறுகையில், இலங்கை, இந்தியாவிற்கு எதிராகத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட எந்த வீரருக்கும் எதிராக நாங்கள் விளையாடவில்லை. எங்கள் அணியிலும் மெத்தியூஸ், அசேல குணரத்னே, லசித் மலிங்க ஆகியோர் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM