முன்னால் தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பாரிய மோசடிகள் சம்பந்தமாக கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 

இன்று காலை 09.15 மணியளவில் ஆணைக்குழு முன் ஆஜராகியதாகவும் இவரிடம் புத்தல பிரதேசத்தில் சுமார்  45 ஏக்கர் தனியார் நிலத்தில் தென்னை பயிரிடுவதற்கான கன்றுகள், தொழிலாளர் மற்றும் பிற வசதி தெங்கு பயிர்ச்செய்கை சபை மூலம் பெற்றுக் கொண்டது தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 

இது தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நேற்றைய தினமும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.