மார்ச் 4ஆம் திகதி வெளி வர இருக்கும் 'பிச்சைக்காரன்'

Published By: Robert

12 Feb, 2016 | 03:39 PM
image

விஜய் ஆண்டனி, சத்னா டைட்டஸ் இணையாக நடிக்க, இயக்குனர் சசி இயக்கத்தில் உருவான 'பிச்சைக்காரன்' மார்ச் மாதம் 4ஆம் திகதி வெளி வர உள்ளது. 

'தமிழ் திரை உலகத்துக்கு இது நல்ல வேளை என்றுத் தான் சொல்ல வேண்டும்.நல்ல தரமான கதை அம்சம் உள்ளப் படங்கள் வெளி வருவதும், வெற்றி பெறுவதும் எங்களைப் போன்ற விநியோகஸ்தர்களுக்கு ஊக்கம் தருகிறது. அந்த ஊக்கமே 'பிச்சைக்காரன்' போன்ற தரமான கதை உள்ள படமும் ஜெயிக்கும்  என்ற நம்பிக்கையை தருகிறது. ரசிகர்கள் இடையேயும். திரை அரங்கு உரிமையாளர்கள் இடையேயும் இன்று விஜய் ஆண்டனிக்கு கிடைத்து இருக்கும் வரவேற்ப்பு அவராவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி எனலாம். இயக்குனர் சசிக்கு ரசிகர்கள் இடையே இருக்கும் கண்ணியமான வரவேற்பு மிகப் பெரியது.

'பிச்சைக்காரன்' அதை இரட்டிப்பு செய்யும் என்பதில் எங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. எங்களது நிறுவனமான கே ஆர் FILMS மற்றும் எங்களுடன் இணைந்து இந்தப் படத்தை வெளியிடும் Sky Lark Entertainment நிறுவனத்தினருக்கும் 'பிச்சைக்காரன்' திரைப்படத்தின் வெற்றி மூலம் பெரும் மதிப்புக் கிடைக்கும் என நம்புகிறோம்' என்கிறார் கே ஆர் Films சரவணன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right